சாப்பிடும்போது அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பா.. எழுந்து நின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

By Parthiban.A Dec 23, 2022 12:30 PM GMT
Report
400 Shares

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவர்களது வீட்டை மீனாவின் அப்பாவுக்கு விற்றுவிட்ட நிலையில் அதில் இருந்து வெளியேற்றப்பட்டனர், அதன் பின் கடையையும் மூட வைத்து மோசமான வில்லத்தனம் செய்து வருகிறார் மீனாவின் அப்பா.

அதன் பிறகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எதாவது செய்தே ஆகவேண்டும் என சொல்லி தற்போது நிச்சயதார்த்தத்திற்கு வரவைத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

சாப்பிடும்போது அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பா.. எழுந்து நின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் | Pandian Stores Meena Father Humiliate Moorthi Fam

லேட்டஸ்ட் ப்ரோமோ

மீனாவின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் என்பதால் மூர்த்தி மற்றும் மொத்த குடும்பமும் அங்கே வருகிறது. மீனாவின் தங்கையே நேரில் வந்து அழுது அழைத்ததனால் தான் அங்கே செல்ல மூர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் அங்கு அவர்களுக்கு ஜூஸ் கூட கொடுக்கக்கூடாது என சொல்லி ஜனார்த்தனன் முதலில் அவமானப்படுத்துகிறார். அதன் பின் மூர்த்தி குடும்பத்தினர் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது "இவங்கள கூப்பிடவே இல்ல, ஆனா முதல் பந்தில சாப்பிட வந்துட்டாங்க.. வெக்கமே இல்லாம" என சொல்லி அசிங்கப்படுத்துகிறார்.

அதை கேட்டு அவர்கள் கோபமாக எழுந்து நிற்பது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US