மச்சானுடன் மலேசியா சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனா- யார் அவர் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஏராளமாக கதாபாத்திரங்கள், எல்லா கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு தொடர் இருந்தது.
அண்ணன்-தம்பிகள் அவர்களின் பாசப்போராட்டத்தையும், கூட்டுக் குடும்பம் எவ்வளவு அழகு போன்று இப்போது மக்கள் மறந்த நிறைய விஷயங்களை தொடர் அழகாக காட்டியிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்தது, இந்த தொடரின் 2ம் பாகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹேமாவின் லேட்டஸ்ட்
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் மீனா கதாபாத்திரத்தில் ஹேமா நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் தனது மச்சானுடன் மலேசியா சென்றுள்ளதாக புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
யார் அந்த மச்சான் என்று பார்த்தால் நடிகை பரீனா தான், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் ஹேமா பதிவு செய்து மச்சான் என பதிவு செய்துள்ளார்.