கண்ணனை திருடன் என கூறிய தனது அப்பாவை வெளுத்து வாங்கிய மீனா- நெகிழ்ந்த ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் செம புரொமோ
விஜய்யில் குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். எந்த மொழி ரீமேக்கும் கிடையாது, முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
தமிழில் ஹிட்டடிக்க இந்த கதையை பல மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர். அண்மையில் ஹிந்தியில் இந்த தொடர் ரீமேக் செய்யப்பட்டு ஓடுகிறது.
இந்த சீரியலில் தற்போது கதையில் கண்ணன் பணம் திருடினால் என மீனாவின் அப்பா அவர்களை வெளியே அனுப்ப இருவரும் இட்லீ கடை திறந்து அதில் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர்.
கண்ணனுக்காக பணத்தை கொடுத்து மிஸ் செய்துவிட்டேன் என அண்ணனிடம் பொய் கூறி கஷ்டப்பட்டு வருகிறார் கதிர், அவர் படும் கஷ்டத்தால் கண்ணன் மீது கடும் கோபத்தில் உள்ளார் முல்லை.
தற்போது சீரியலின் புதிய புரொமோவில் மீனா, கண்ணனை எப்படி திருடன் என சொன்னீர்கள் என சண்டை போட்டு சிசிடிவி கேமராவை செக் செய்கிறார். அதில் உண்மையான திருடன் யார் என்பது தெரியவில்லை மீனாவின் அப்பா திகைத்து நிற்கிறார்.
மீனா செய்த காரியத்தை பார்த்த ஜீவா அப்படியே நெகிழ்ச்சியாக தனது மனைவியை பார்க்கிறார்.