ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.
ஜீவா போனில் இருந்து ஜனார்த்தனன் பேசிய விஷயம் ஏற்கனவே மூர்த்தி காதுக்கு சென்றதால் அவர் கோபமாக 'இனி ஜீவாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என எல்லோருக்கும் போன் செய்து கூறுகிறார். அதை பற்றி அறிந்து ஜீவாவும் வருத்தமடைகிறார்.
புது ப்ரோமோ
இந்நிலையில் இந்த வார எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாமனார் ஜனார்த்தனன் ஜீவாவிடம் சூப்பர்மார்கெட் சேல்ஸ் அதிகரிக்க ஐடியா கேட்கிறார். ஆபர் எதாவது கொடுத்தால் அருகில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என ஜீவா கூறுகிறார்.
என் அண்ணன் தம்பிகள் மீது கோபம் இருந்தாலும் அவர்கள் நல்லா இருக்க கூடாது என நினைக்கமாட்டேன் என ஜீவா கூறுவதை கேட்டு வில்லன் ஜனார்த்தனன் சற்று ஷாக் ஆகிறார். இதை மாற்ற வில்லன் இனி என்னவெல்லாம் செய்ய போகிறாரோ?
நடிகை கஜோல் மகளுடன் எல்லைமீறி கவர்ச்சி போஸ்.. வைரல் புகைப்படங்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
