ஜீவாவை தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியேறும் இன்னொரு நபர்- உடையும் மூர்த்தி குடும்பம், பரபரப்பான புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கூட்டுக் குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதை இன்றைய காலத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. தனிக்குடும்பங்கள் அதிகம் வந்துள்ள இந்த காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு உதாரணமாக ஒளிபரப்பான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தொடர் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துவிட்டது, ஆனாலும் அண்ணன்-தம்பிகள் இதுநாள் வரை ஒன்றாக தான் இருந்தார்கள்.
ஆனால் கல்யாணத்தில் எல்லோரும் தனியாக மொய் எழுத என் பெயர் இல்லை என சண்டை போட்டு ஜீவா பிரிந்துவிட்டார்.
பரபரப்பான புரொமோ
இந்த நிலையில் தான் அடுத்து நடக்கப்போகும் விஷயம் குறித்து பரபரப்பான புரொமோ வந்துள்ளது. அதில் தனம் கண்ணனை திட்ட அதற்கு ஐஸ்வர்யா அவரை எதிர்த்து சண்டை போடுகிறார்.
முல்லை கண்ணன் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு இருப்பதை கூற அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.
பின் மூர்த்தி கஷ்டப்பட்டு யாரும் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என கூற ஐஸ்வர்யா வெளியே போக நோக்கில் பார்க்கிறார். இந்த பரபரப்பான புரொமோ இதோ,
சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது?