மீனாவின் அப்பா கொடுத்த ஷாக்! ரெஜிஸ்டர் ஆபிஸில் அதிர்ச்சியில் உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஓர் ஷாக் ஆன சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியும் அவரது தம்பிகள் எல்லோரும் சேர்ந்து அவர்கள் சொந்த வீட்டை விற்பது என முடிவு செய்கிறார்கள். அந்த வீட்டை தம்பி ஜீவாவின் மாமனார் வாங்கி கொள்வதாக அவரே வந்து கேட்கிறார்.
அதன் பின் ஒருவழியாக மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் வீட்டை அவருக்கே விற்க முடிவு செய்கிறார்கள். அதற்காக ரெஜிஸ்டர் ஆபிஸ் செல்லும் போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
ரெஜிஸ்டர் ஆபிசில் அதிர்ச்சி
மூர்த்தி மற்றும் தம்பிகள் எல்லோரும் ரெஜிஸ்டர் ஆபிசில் பாத்திரத்தில் கையெழுத்து போட்டு முடித்தபிறகு, மீனா மற்றும் அவரது அப்பா வருகின்றனர்.
சொத்தை வாங்குபவர் கையெழுத்து போடும்படி கூறியபோது மீனாவிடம் பத்திரத்தை கொடுத்து கையெழுத்து போட சொல்கிறார் அவரது அப்பா. நீங்க மீனாவுக்கு தான் வீட்டை எழுதி தரீங்க என சொன்னதும் மூர்த்தி மற்றும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.
இனி என்ன நடக்குமோ..
ப்ரோமோ இதோ