பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு விஜய்யின் வாரிசு ஷூட்டிங்கில் நடந்த அவமானம்! அதிர்ச்சி புகார்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருபவர் ரவிச்சந்திரன். அந்த தொடரில் அவருக்கு நெகடிவ் கதாபாத்திரம் தான் என்றாலும் அதிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து வருகிறார்.
அவர் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் தன்னை விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங்கில் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என கூறி இருக்கிறார்.
அந்த வார்த்தை சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்க
ஆரம்பத்தில் ஒரு ரோலில் நடிக்க இவரை அழைத்து இயக்குனர் பேசி இருக்கிறார். நாளை ஷூட்டிங் வர சொல்ல இவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் லீவு வாங்கி கொண்டு அங்கு போய் சேர்ந்திருகிறார்.
அவரை பார்த்த இயக்குனர் 'நீங்க ரிச் லுக்கில் இருக்கீங்க' என சொல்லி கிளம்ப சொல்லிவிட்டார். இப்படி ஒரு அவமானத்தை எதிர்ப்பார்க்காத அவர் கேரவனில் அதிர்ச்சியில் உட்கார்ந்து இருக்கிறார்.
என்னை இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள் என விஜய்யிடமே சொல்லிவிட்டு போகிறேன் என சொன்னாலும் அங்கிருப்பவர்கள் விடவில்லையாம்.
இது பற்றி ரவிச்சந்திரன் தற்போது கலக்கத்துடன் பேட்டியில் பேசி இருக்கிறார்.