உடல் பருமனை குறைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சாய் காயத்ரி என்ன செய்தார் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கடந்த சில மாதங்களாக இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் தொடரின் கதைக்களம் செல்வதை பார்க்கும் போது இப்போதைக்கு தொடர் முடிவதாக தெரியவில்லை.
இந்த தொடரில் ஐஸ்வர்யா ரோலில் சில மாதங்கள் நடித்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் உடல் எடையை பிட்டாக வைக்க எடுத்துக் கொண்ட டயட் குறித்து வெளியாகியுள்ளது.
நடிகையின் டயட்
சாய் காயத்ரி காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 250 மிலி வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறாராம். பின்பு முதல் நாள் இரவே ஊற வைத்த பாதாம் மற்றும் நட்ஸ்களை தவறாமல் எடுத்து கொள்வாராம்.
இவை வெயிட் லாஸ், பெல்லி லாஸ் போன்றவற்றிக்கு பெரிதும் உதவுமாம். இரவு உணவை 7 மணிக்குள் முடித்து விடுவாராம். தனது உணவில் அதிக சாம்பார், சட்னி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து கொள்ள மாட்டாராம்.
கடந்த 3 வருடங்களாக சாய் காயத்ரி குடிக்கும் டீ பற்றி விவரம் வந்துள்ளது.
மிளகு, சீரகம், கிராம்பு, மஞ்சள் தூள், புதினா இலைகள், டீ தூள் சேர்த்து தண்ணீரில் 20 நிமிடம் நன்கு கொதிக்க விடுவாராம், பின்பு அதை வடிக்கட்டி சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பாராம்.
தமிழகத்தில் மட்டுமே செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்திய ஜெயிலர்- இதுவரை இத்தனை கோடியா?