தவெகவில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்.. வீடியோ இதோ
தவெக
நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகி கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்த இரண்டரை ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், பாராட்டுகளும் அதே போல் விமர்சனங்களும் இந்த புதிய ஆட்சியின் மீது வைக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக ஆட்சி அமைத்தபின் மாற்று கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து வருவதை நாம் கண்கூட பார்த்து வருகிறோம். இந்த நிலையில், பனையூரில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகிய பாலகங்கா, விஜயதரணி, இளவரசன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

பாண்டி ரவி
இதில் பிரபல நடிகர் பாண்டி ரவி பாஜகவில் இருந்து விலகி தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் பிரபலமாக ஒருவராக இருப்பவர் நடிகர் பாண்டி ரவி.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பாண்டி ரவி @TVKPartyHQ - வில் இணைந்தார் ! 🙏 https://t.co/IIvkq2l5Jp pic.twitter.com/mJYAfUDcGg
— Prakash Vijay (@PrakazVijay_Of) June 13, 2026
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri