பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சி என்றாலே முதலில் ரியாலிட்டி ஷோக்கள் நமக்கு நியாபகம் வந்துவிடும்.
அடுத்து நமது நியாபகத்திற்கு வருவது சீரியல்கள் தான், அந்த சீரியல்களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு தொடராக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். எந்த ஒரு ரீமேக்கும் இல்லை, முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்ட ஒரு சீரியல்.

கடந்த 2018ம் ஆண்டு நாம் பார்த்து பழகிய நடிகர்களை வைத்து வெற்றிகரமாக முதல் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. 5 வருடங்களுக்கு மேலாக ஓடிய இந்த தொடரின் முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் பாகம் புதிய கதைக்களத்துடன் நடிகர்கள் மாற்றத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம்
போட்டோ
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் கதைக்களம் பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. கோமதி அண்ணன்கள் வீட்டிற்கு வர அந்த நேரத்தில் ராஜி திருமண பிரச்சனை ஆரம்பிக்கிறது.
அந்த நேரத்தில் கோமதி, ராஜி-கதிர் இருவருக்கும் நான் தான் திருமணம் செய்து வைக்கிறேன் என கூற இரண்டு குடும்பமும் செம ஷாக் ஆகிறார்கள், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இந்த நேரத்தில் முதல் சீசனில் கதிர், கண்ணன், முல்லை, தனம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர். இதோ அந்த போட்டோ,
