பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் சீரியல் நடிகர்களின் Reunion... யாரெல்லாம் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இதன் முதல் பாகம் கடந்த அக்டோபர் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2023ம் ஆண்டு தான் முடிவுக்கு வந்தது. அண்ணன்-தம்பிகளின் பாசம், கூட்டுக் குடும்பம் போன்ற விஷயங்களை வெளிக்காட்டிய தொடராக இருந்தது.
முதல் பாகம் முடிவடைந்த கையோடு 2வது சீசன் தொடங்கியது. 2 சீசன்களையும் சேர்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 1348 எபிசோடுகள் ஒளிபரப்பாகி உள்ளது.
Re-Union
2வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாக தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் நடித்த சரவண விக்ரம், சுஜிதா, காவ்யா அறிவுமணி ஆகியோர் நீண்ட மாதங்களுக்கு பின் மீண்டும் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.