80 பவுன் நகை கவரிங்-ஆ!! அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. வெளிவந்த பல நாள் உண்மை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டது. இதன்பின், கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் உதவியால் அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், அடுத்ததாக மற்றொரு பிரச்சனையை கொண்டு வந்துள்ளார் மயிலின் அம்மா. தங்கள் மகளுக்காக போட்ட 80 பவுன் நகையை மீண்டும் தரவேண்டும் என போலீஸிடம் வந்து புகார் அளிக்கிறார்.
அந்த நகையை கொண்டு வந்து கொடுக்கும்படி போலீஸ் கூறவும், அதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் எடுத்து வருகிறார்கள். நகைகளை பார்த்துவிட்டு, நாங்கள் தங்கமாக கொடுத்த நகைகள் அனைத்தும் போலியாக இருக்கிறது என கூறுகிறார் மயிலின் அம்மா.
80 பவுன் நகை கவரிங்-ஆ
இதன்பின்தான் பல நாள் உண்மை வெளிவருகிறது. மயிலுக்கு நீங்கள் போட்ட 8 பவுன் மட்டும் தான் தங்கம், மற்றவை எல்லாம் கவரிங் என மீனா கூறுகிறார். இதன்பின்தான் உண்மை வெளிவருகிறது. இதை கேட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
[GTHFDC ]
இதில் யார் சொல்வது உண்மை என தெரிந்துகொள்ள மயிலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உண்மையை கூற சொல்கிறார் போலீஸ். மயில் உண்மையை கூறுவாரா? அல்லது தனது அம்மாவுக்கு சாதகமாக ஒரு பொய்யை சொல்லி மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை போலீசிடம் மாட்டிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.