பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த புதிய சிக்கல்- ரசிகர்கள் ஷாக், இனி தொடருமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லை, கண்ணன்-ஐஸ்வர்யா என இதில் நடித்தவர்கள் அனைவருமே மக்களிடம் பிரபலம் அடைந்துவிட்டார்கள்.
புதிய வீடு கட்டி அதில் சந்தோஷமாக இருக்கும் அண்ணன்-தம்பிகளுக்கு தனத்திற்கு இருக்கும் பிரச்சனை தெரிய வருகிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியவில்லை.
புதிய சிக்கல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் தொடங்க இருக்கிறது என ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தொடர் குழுவினர் பக்காவாக செய்து விட்டார்களாம்.
ஆனால் திடீரென சுஜிதா சொந்த விஷயங்கள் காரணமாகவும், குமரன் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதால் 2வது பாகத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார்களாம்.
அவர்கள் மாறினால் கதை நன்றாக இருக்காதே என்ன செய்வது என்று பெரிய சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
48 வயதில் திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை நக்மா- இப்படியொரு ஆசை உள்ளதா?