பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரன் நடிக்கும் முதல் திரைப்படம்... குவியும் வாழ்த்து
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல். கடந்த 2018ம் ஆண்டு முதல் பாகம் தொடங்கப்பட 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.
அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் தொடராக இந்த சீரியல் இருந்தது, தமிழிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தொடர் என்ற பெருமையை பெற்றது.
இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குமரன்
முதல் பாகத்தில் கதிரவன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் குமரன் தங்கராஜன். தனக்கென்று ஒரு தனி ஸ்டைலில் நடித்து கலக்கிய இவர் நடனமும் சூப்பராக ஆடுவார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை முடித்தவர் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
குமரன் சம்பவம் என்ற பெயரில் புதிய படம் நடித்து வருகிறார், இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.