பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தின் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி- வீடியோவும் ரெடி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 2018ம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகள் அவர்கள் திருமணம் நடந்தும் எப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை தொடர் காட்டி இருந்தது.
காசு, பணம் எல்லாம் விஷயம் இல்லை சொந்த பந்தம் இருந்தால் தான் வாழ்க்கை அழகாக இருக்கும் என்பதை உணர்த்தினார்கள்.
முதல் ப்ரோமோ
முதல் பாகம் முடிந்த அதே வேகத்தில் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரிலேயே புதிய கதைக்களத்தில் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஸ்டாலின், ஹேமா என முதல் சீசனில் நடித்த சிலர் இதில் நடிக்கிறார்கள்.
மீண்டும் முதல் பாகம் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான வீடியோ வந்துள்ளது. அதாவது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை முதலில் இருந்து ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்கள் என தெரிகிறது.