பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த விஷயத்துடன் முடிவுக்கு வருகிறதா?- பிரபலம் போட்ட பதிவு
விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல்கள் படு ஹிட்டாக ஓட ஆரம்பித்துள்ளது. அதற்கு முன் இந்த தொலைக்காட்சியில் அதிக நிகழ்ச்சிகள் தான் ஒளிபரப்பாகும், சீரியல்கள் குறைவாக தான் இருக்கும்.
ஆனால் இப்போது சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாக, எல்லாமே படு ஹிட்டாக ஓடுகிறது. அப்படி இந்த தொலைக்காட்சி சீரியல்களில் ஹிட் லிஸ்டில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
குடும்ப பாங்கான இந்த கதை மக்களின் பெரிய ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடுகிறது. இதற்கு இடையில் சமூக வலைதளங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா திருமணத்துடன் முடிவுக்கு வருகிறது என பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமாவிடம் சீரியல் முடிவடைகிறதா என இன்ஸ்டாவில் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு இதுவரை எதுவும் கூறவில்லை, எனவே இல்லை என பதில் கூறியுள்ளார்.
You May Like This Video