பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இந்த முக்கிய நடிகரும் வர மாட்டாரா? மனமுடைந்த ரசிகர்கள்..!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு பெரியளவில் ரசிகர்கள் உண்டு.
மேலும் இந்த சீரியலின் மூலம் பிரபலமான சித்ரா, தனது கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து அவரின் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார், இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கதிர் படவாய்ப்பு காரணமாக பெங்களூரு சென்றுள்ளதால் அவரையும் தொடரில் காண முடியவில்லை.
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதனிற்கு, தளபதி விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்ததாகவும் அவர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.