பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனாவிற்கு காலில் என்ன ஆனது?- நடக்கக் கூட முடியாமல் இப்படி ஆகிவிட்டாரே?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் டா தம்பிகடா என கெத்தாக ஒன்றாக இருந்தவர்கள் இப்போது பிரிந்திருப்பது சீரியல் ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக தான் உள்ளது. கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சி இந்த வாரத்தில் நடக்கும் ஒரு கதைக்களம்.
இன்றைய எபிசோட் இறுதியில் ஜீவா கிளம்பலாம் என மீனாவை அழைக்கிறார், அப்படியே அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்களா அல்லது இந்த நிகழ்விலும் சண்டை நடக்குமா என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.
ஆனால் கண்டிப்பாக இடையில் பெரிய சண்டை கலந்த எமோஷ்னல் வாக்குவாதம் சகோதரர்களிடையே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடக்க முடியாமல் ஹேமா
இந்த நிலையில் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சொந்தமாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார், அது நமக்கு நன்றாகவே தெரியும். அதில் சமீபத்தில் வீட்டில் சுடு தண்ணீர் வைக்கும் எடுக்கும் போது கை தவறி தனது கீழே விட்டுள்ளார்.
அப்போது சுடு தண்ணீர் அவரது காலில் பட்டு தோள் எல்லாம் உறிந்துள்ளது, பாதத்திலும் பலத்த காயமாம், இதனால் நடக்க முடியாமல் கஷ்டப்படுவதாக அதில் தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்களும் சீக்கிரம் காயம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
