அம்மாவை இழந்து தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இன்னொரு சோகம்- அடுத்தடுத்து இவ்வளவு கஷ்டமா?
விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத விஷயம் நடந்துள்ளது.
லட்சுமி அம்மா அவர்களின் இறப்பை யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை, கடந்த சில நாட்களாக அந்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகின்றன. அவர்கள் அழுவதை கண்டு சில ரசிகர்களும் நிஜமாகவே அழுதுள்ளார்கள்.
சீரியலின் புரொமோ கீழ் பலரும் தங்கள் வாழ்வில் முக்கியமானவரை இழந்த சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது, அதில் கண்ணன் வந்தால் தான் அம்மாவை எடுக்க முடியும் என மூர்த்தி மற்றும் குடும்பம் உறுதியாக இருக்க அக்கம் பக்கத்தார் இல்லை நீண்ட நேரம் இறந்தவரை வைத்திருக்க கூடாது நமக்கு நல்லது இல்லை என்கின்றனர்.
அதனால் கண்ணன் வராமலேயே தங்களது அம்மாவை அடக்கம் செய்ய புறப்படுகிறார்கள்.
இந்த புரொமோ வெளியாக ரசிகர்கள் என்ன இது அடுத்தடுத்து அவர்களுக்கு ஏற்படும் சோகம் என புலம்பி வருகிறார்கள்.