பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு அடுத்து வரப்போகும் ஒரு சூப்பரான செய்தி- பார்க்க தயாரா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்-தம்பிகள் ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது கதிர்-முல்லை ஜோடி தான். சித்ரா இருக்கும் போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது, இப்போதும் கதிர்-முல்லை புதிய ஜோடியையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
குழந்தை இல்லை என அவமானப்படுத்தப்பட்ட கதிர்-முல்லை ஜோடி இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள், வளைகாப்பு எல்லாம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இடையில் கண்ணன் கடன் வாங்கியதால் கதிர் பிரச்சனையில் சிக்கி இப்போது எல்லாம் முடிந்து மூர்த்தி, கதிர், கண்ணன் 3 பேரும் சேர்ந்துவிட்டனர்.
அடுத்த எபிசோடு
கண்ணன் பிரச்சனை தீர அடுத்து என்ன நடக்கப்போகிறது கதையில் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.
அதாவது கதிர்-முல்லை CheckUp சென்றுகொண்டிருக்கும் போது சில ரவுடிகளால் கர்ப்பமாக இருக்கும் முல்லை தாக்கப்படுகிறாராம். உடனே கதிர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க போராட்டத்திற்கு பிறகு அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறதாம்.
இந்த எபிசோடு செய்தி வெளியாக ரசிகர்கள் குழந்தையை காண ஆர்வமாக உள்ளனர்.
கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டு சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா?