பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ப்ரோமோ வீடியோ
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களில் மக்களின் மனதை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்களின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மூத்த அண்ணன் மூர்த்தி, கதிரிடம் காசை சரியான நேரத்தில் கட்டியாச்சா என்று கேட்க, அதற்கு கதிர் தான் புதிய வீடு கட்டட வேளையில் மறந்துவிட்டேன் என்று கூறுகிறார். அப்போது, புதிய வீடு கட்டும், கட்டட இடத்தில், நீ சும்மா தான இருக்க என்று கதிரிடம், ஜீவா கேட்கிறார்.
இதனால் கோபமடைந்த கதிரின் மனைவி முல்லை, கட்டடம் கட்டும் இடத்தில் அவர் ஒன்றும் சும்மா நிற்கவில்லை, அவரும் அங்கு வேலை பார்க்கிறார். தனம் அக்காவுடன், மீனாவுனம் அவங்க பங்குக்கு புதிய வீடு கட்ட நகைகளை கொடுத்துவிட்டார்கள். ஆனால், என்னிடமும், என் கணவரிடமும் எதுவுமில்லை.
அதனால் தான் நாங்கள் எங்களின் உழைப்பை போடுகிறோம் என்று கூற, அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இடையில் சண்டை வருமா, குடும்பம் பிரியுமா என்றும் ரசிகர்கள் தற்போதே கமெண்ட் செய்ய துவங்கிவிட்டார்கள்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..