பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுதானா?- பிரபலம் கூறிய தகவல்

Yathrika
in தொலைக்காட்சிReport this article
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். 1348 எபிசோடுகளுடன் தொடர் கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது.
வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரித்த இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அவர்களுக்கு வெற்றி புரொஜக்ட்டாக அமைந்தது.
ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன் என பலர் நடிக்க இந்த தொடர் ஒளிபரப்பாக இப்போது அவர்களை கதாபாத்திர பெயர்களிலேயே மக்களும் அவர்களை இப்போதும் பார்க்கிறார்கள்.
சுஜிதா சொன்ன விஷயம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்ததும் ரசிகர்கள் அனைவருக்குமே கொஞ்சம் வருத்தம் தான், பிரபலங்களும் தொடர் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தொடரில் அண்ணியாக நடித்த சுஜிதா ஒரு பேட்டியில், இந்த தொடருக்கு முதலில் தாமரை என்று தான் பெயர் வைக்க இருந்தார்கள், ஆனால் அதன்பிறகே சில காரணங்களால் பெயர் மாற்றப்பட்டது என கூறியுள்ளார்.