பாண்டியன் ஸ்டோர்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்கலையே
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடைசி தம்பி கண்ணன் வீட்டை பிரிந்து தனியாக இருந்து வந்த நிலையில் அவன் மீது தாக்குதல் நடந்தது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருந்தது.
அது மட்டுமின்றி மூர்த்தியின் மனைவி தனம் தனியாக சென்று கண்ணனைவீட்டுக்கு அழைத்து வருவது சமீபத்தில் காட்டப்பட்டு இருந்தது. அதை மூர்த்தி எதிர்த்து தனத்துடன் பேசாமல் இருப்பது போலவும் காட்டப்பட்டது.
ஆனால் இன்றைய எபிசோடில் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் தெரியவந்திருக்கிறது. மூர்த்தி பைக் ஓட்டி சென்றுகொண்டிருக்கும்போது தம்பி அவரிடம் 'அண்ணியிடம் பேசாமல் இருக்காதீங்க' என அட்வைஸ் கூறிக்கொண்டுசெல்கிறார்.
ஆனால் மூர்த்தி அதை கண்டுகொள்ளாமல் போகிறார். இறுதியில் அவர் சிரிக்கிறார். அதை பார்க்கும்போது மூர்த்தி தான் கண்ணனை அழைத்து வர சொல்லி இருப்பாரோ? இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஒருவேளை இது மூர்த்தி அண்ணனோட plan-ஆ இருக்குமோ.. ?
— Vijay Television (@vijaytelevision) December 15, 2021
பாண்டியன் ஸ்டோர்ஸ் - இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/fNClCWHjCx