கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தங்கமயிலிடம் இருந்து சரவணன் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். தங்கமயிலும் தன்னுடைய குழந்தையை தாயாக நானே வளர்த்துக்கொள்கிறேன், யாருடைய துணையும் தனக்கு தேவையில்லை என தைரியமான முடிவு எடுத்துள்ளார். இருந்தும் கர்ப்பமாக இருக்கும் மயிலுக்கு துணையாக நிற்க வேண்டும் என கோமதி மற்றும் மீனா தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ | Pandian Stores Serial Upcoming Week Episodes Promo

அடுத்த வார புரோமோ

இந்த நிலையில் அஞ்சலியுடன் சரவணன் பழகி வருவதை கோவிலில் தங்கமயிலின் தாய் பார்த்துவிடுகிறார். உடனே அங்கு சரவணனிடமும் வாக்குவாதம் செய்கிறார். இப்படியொரு சம்பவம் நடந்த நிலையில், தற்போது அஞ்சலி வீட்டிற்கே தங்கமயிலின் தாய் சென்று அவர்களை தெருவுக்கு வரவழைத்து அசிங்கப்படுத்தும் வகையில் பேசுகிறார். இதனால் கண்கலங்கி அழுகிறார் அஞ்சலி.

கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ | Pandian Stores Serial Upcoming Week Episodes Promo

திருமணத்திற்கு பின் கணவனிடம் கண்கலங்கி அழுத நிலா.. காரணம் என்ன? அய்யனார் துணை சீரியல் அடுத்த வாரம் நடக்கவிருப்பது

திருமணத்திற்கு பின் கணவனிடம் கண்கலங்கி அழுத நிலா.. காரணம் என்ன? அய்யனார் துணை சீரியல் அடுத்த வாரம் நடக்கவிருப்பது

இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவருகிறது; உடனே தங்கமயில் வீட்டிற்கு செல்லும் அவர், அங்கு சண்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் அங்குள்ள பெரிய கல்லை எடுத்து கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது போட போகிறார். உடனே அங்கு வரும் கதிர், சரவணனை தடுத்து நிறுத்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ | Pandian Stores Serial Upcoming Week Episodes Promo

இதன்பின் தனது தாயிடம் பேசும் தங்கமயில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். தங்கமயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற விஷயத்தை சரவணனிடம் பாண்டியன் கூற, அவர் மருத்துவமனைக்கு வந்து மயிலை சந்திக்கிறார்.

இதோ அந்த புரோமோ வீடியோ:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US