பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வசந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா- இவ்வளவு பெரிய குழந்தையா, போட்டோவுடன் இதோ
வசந்த் வசி
பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் முதல் பாகம் எப்போதோ முடிவுக்கு வர அதே வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது. இந்த 2ம் பாகம் அப்பா-மகன்கள் பாசத்தை உணர்த்தும் கதைக்களமாக அமைந்துள்ளது.
இளம் கலைஞர்கள் நடிக்கும் இந்த தொடரின் கதை இப்போது தான் சூடு பிடித்துள்ளது என்றே கூறலாம்.
வசந்த் வசி
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செந்திலாக முதலில் வசந்த் வசி என்பவர் தான் நடித்து வந்தார்.
ஆனால் சில காரணங்களால் அவர் தொடரில் இருந்து விலக வெங்கட் இப்போது செந்திலாக நடித்து வருகிறார். சீரியலில் இருந்து வெளியேறிய வசந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.
தற்போது இவரை பற்றி வந்த ஒரு தகவல் தான் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் ஆகாத பேச்சுலர் தான் வசந்த் என ரசிகர்கள் நினைத்தார்கள், ஆனால் அது உண்மை இல்லையாம்.
அவருக்கு ஏற்கெனவே அனு செந்தில் என்பவருடன் திருமணம் நடந்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது. இதோ போட்டோஸ்,

