கதிரை மிகவும் தவறாக மோசமாக பேசிய மல்லி- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து வெடிக்கப்போகும் சண்டை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில வாரங்களாக சோகத்தின் உச்சமாக இருந்தது. இப்போது தான் கதை லட்சுமி அம்மாண் இறப்பில் இருந்து மாறி வருகிறது.
புதிய கடை பிளான்களில் புதிதாக கதையை நகர்த்துகின்றனர், அதில் மீனா கடைக்காக தனது நகைகளை கொடுக்க எல்லோரும் அதிர்ச்சியடைந்த காட்சிகள் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
சீரியல் முடிவில் நாளை வரப்போகும் காட்சிகளின் புரொமோ வெளியிட்டிருக்கிறார்கள். அதில் கதிர் தனது மாமியாரை மருத்துவமனை அழைத்து செல்ல அவரது வீட்டிற்கு செல்ல விவரம் கேட்ட மல்லி கோபமாக பேசுகிறார்.
இதுவரை எனக்கு தெரியாது என்பதால் கண்டவர்கள் உங்களை கவனித்தார்கள், இனி கண்டவர்கள் யாரும் பார்க்க வேண்டியதில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
இதனால் வீட்டில் சண்டை வெடிக்குமா அல்லது சுமூகமாக கதை செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.