பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?- மீனா வெளியிட்ட வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். ஜீவா மொய் லிஸ்டில் தனது பெயர் இல்லை என்பதால் கடந்த 3 நாட்களாக திருமண மண்டபத்தில் பெரிய வசனங்கள் பேசி கிழி கிழி என கிழித்துவிட்டார்.
இன்றைய எபிசோடில் அந்த காட்சிகள் முடிந்து அனைவரும் வீடு திரும்பிவிட்டார்கள். ஜனார்த்தனன் வழக்கம் போல் ஜீவாவை குழப்ப ஆரம்பித்துவிட்டார்.
ஒரு பக்கம் ஐஸ்வர்யா மூர்த்தி-தனத்திடம் சண்டைக்கு நிற்கிறார். இதனால் கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
படப்பிடிப்பு தள வீடியோ
இந்த நேரத்தில் தான் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தனது யூடியூப் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியுமா என வீடியோவை பார்த்தால் படப்பிடிப்பு தளத்தில் காலையில் சென்றதும் என்னென்ன செய்கிறோம், கேமராவிற்கு பின்னால் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதை வீடியோவாக காட்டியுள்ளார்.
அந்த வீடியோவையும் பார்த்து ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.