பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகள், கதை மற்றும் முழு விவரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்தியமூர்த்தியின் குடும்பம் மற்றும் அவர்களது வாழ்க்கையின் கதை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை என்னவென்றால் பல இடையூறுகளுக்கு மத்தியில் தங்கள் பொருளாதார நிலையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்த கடுமையாக உழைக்கும் குடும்பத்தை பற்றியது.
சகோதரர்களின் பாசம், குடும்ப உணர்வுகள், மக்கள் இப்போது மறந்திருக்கும் கூட்டுக் குடும்பம் அழகாக காட்டுகிறது.
தமிழிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் தொடரின் வெற்றி நாடு முழுவதும் பேசப்படுகிறது.
தொடக்கம், நேரம்
2018ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் எந்த நேர மாற்றமும் இல்லாமல் இரவு 8 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது. Venus Infotainment தயாரிக்கும் இந்த தொடரை சிவசேகர் மற்றும் டேவிட் இயக்கி வருகிறார்கள்.
சீரியல் நடிகர்கள்
- ஸ்டாலின் முத்து- சத்தியமூர்த்தி/மூர்த்தி
- சுஜிதா தனுஷ்- தனலட்சுமி/தனம்
- வெங்கட் ரெங்கநாதன்- ஜீவானந்தம்/ஜீவா
- குமரன் தங்கராசன்- கதிரவன்
- சரவணன் விக்ரம்- கண்ணன்
- ஹேமா ராஜ்குமார்- மீனாட்சி
- லாவண்யா- முல்லை
- தீபிகா- ஐஸ்வர்யா
- ஷீலா- லட்சுமி
- எஸ்.டி.பி ரோசரி- முருகானந்தம்
- சாந்தி வில்லியம்ஸ்- பார்வதி
கதையில் அடுத்த திருப்பம்
பல கஷ்டங்களுக்கு பிறகு திருமணமான தம்பிகளுடன் வாழ்ந்து வரும் மூர்த்தி வீடு, கடை என அனைத்தும் இழந்தாலும் கூட்டுக் குடும்பமாக தனது சகோதரர்களுடன் இப்போது பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.