தனத்திற்கு வந்த கொடிய நோய், ஷாக்கான மீனா- பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்ப பாங்கான தொடரில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்பதே தெரியாத மக்களுக்கு ஒரு உதாரணமாக இந்த தொடர் இருந்து வந்தது.
தற்போது தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது, கதையும் அதேபோல் தான் நகர்ந்து வருகிறது.
ஆனால் சீரியல் குழு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அடுத்த புரொமோ
இந்த வாரத்திற்கான புதிய புரொமோ வெளியாகி இருந்தது. அதில் தனம் தனக்கு நெஞ்சில் வலி ஏற்படுவதாக மருத்துவரிடம் கூறுகிறார், அவர் சில டெஸ்ட் எடுக்க கூறுகிறார்.
இதைக்கேட்ட தனம் குழப்பத்தில் நிற்க மருத்துவமனையில் எதற்சையாக தனத்தை காண்கிறார்.
என்ன ஆனது என கேட்ட தனது எதுவும் கூறவில்லை, உடனே மீனா மருத்துவரிடம் போய் அவருக்கு என்ன ஆனது என கேட்கிறார். மருத்துவர் கூறியதை கேட்டு மீனா ஷாக் ஆகிறார்.
இதோ அந்த புரொமோ,