ஊரே பாத்து சிரிக்குது.. ஹாஸ்பிடலில் காசில்லாமல் நிற்கும் கண்ணன்! பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று
பாண்டியன் ஸ்டோர்ஸில் நேற்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் டான்ஸ் ஆடி வீடியோ ரெகார்டு செய்து கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யா தவறி விழுந்துவிடுகிறார். அதனால் வயிற்றில் அடிபட்டு விடுகிறது.
வீடியோ பார்த்து ஊரே சிரிக்குது..
அந்த வீடியோவை ஐஸ்வர்யா ஊரில் எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறார். அதை தனம், முல்லை மற்றும் மீனாவின் குடும்பத்துக்கும் அனுப்பி வைக்கிறார். மீனாவின் அம்மா அதை பார்த்துவிட்டு ஏளனமாக சிரிக்கிறார். மேலும் மீனாவின் அப்பா வீடியோ பார்த்துவிட்டு மோசமாக திட்டுகிறார். ஊரே பார்த்து சிரிக்கிறது என அவர் கூறுகிறார். மேலும் முல்லையும் அந்த வீடியோவை பார்த்து கோபம் அடைகிறார்.
ஹாஸ்பிடலில் காசில்லாமல் நிற்கும் கண்ணன்
அதன் பின் ஐஸ்வர்யா திடீரென வயிற்று வலி என கூறுகிறார். அப்போது பார்க்க வரும் சித்தி கண்ணனுக்கு போன் செய்து உடனே வரவைக்கிறார். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக்கொண்டு போய் சேர்க்கின்றனர்.
ஹாஸ்பிடலில் பணம் கட்ட சொல்கிறார்கள். அப்போது கையில் காசு இல்லாமல் கண்ணன் க்ரெடிட் கார்டை கொடுத்து பில் கட்டுகிறார். அதன் பின் மருந்து வாங்கி வர சொல்லி சீட்டு கொடுக்கிறார்கள். அப்போது கிரெடிட் கார்டு கொடுத்தால் லிமிட் முடிந்துவிட்டது என சொல்கிறார்கள்.
கையில் காசில்லாமல் ஹாஸ்பிடலில் நிற்க, ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கேட்கிறார். அவர் உடனே 'நான் சும்மா தான் பார்க்க வந்தேன், காசெல்லாம் இல்ல' என கூறிவிட்டு போகிறார்.
இனி என்ன செய்ய போகிறார் கண்ணன்? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நடிகை தேவயானியா இது? கைக்குழந்தையுடன் அவரது போட்டோவை பாருங்க