கையை எடு.. கல்யாண வீட்டில் ஜீவா செயலால் கதிர் ஷாக்! அடுத்து இப்படி ஒரு பிரச்சனையா
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவின் தங்கை திருமணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் சென்று இருக்கிறது. அங்கு கல்யாண வீட்டிலேயே ஜீவா அமர்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை குடித்தால் விடிந்த பின் முகம் போட்டோவில் நன்றாக இருக்காது என சொல்லி தடுக்கிறார் ஜீவா. அதே நேரத்தில் அவர் இஷ்டத்துக்கு குடிப்பதை பார்த்து வில்லன் மாமனார் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொள்கிறார்.
'உங்க அண்ணன் சொன்னதை கேட்டேன், உனக்கு அந்த கடையில் இருந்து என்ன பயன். காசும் கிடைப்பதில்லை. இப்போ மரியாதையும் இல்லை என தெரிந்துவிட்டது. என்னுடன் வந்து என் பிஸ்னஸை பார்த்துக்கோங்க மாப்பிள்ளை' என ஜீவாவை தூண்டி விடுகிறார் அவர்.
கையை எடு
அந்த நேரத்தில் கதிர் வந்து ஜீவாவை குடிக்க வேண்டாம் என தடுக்க அவர் கோபமாக 'கையை எடு.. என்னை குடிக்க வேண்டாம் என சொல்ல நீ யார்' என சொல்லி கதிரை அசிங்கப்படுத்துகிறார். அவரும் அங்கிருந்து கலக்கத்துடன் சென்றுவிடுகிறார்.
அதன் பின் காலையில் ஜீவா எல்லோருக்கும் முன் மண்டபத்திற்கு சென்று வேலைகளை செய்கிறார்.
திருமணத்திற்கு என்ன மொய் செய்வது என ஜீவாவிடம் மீனா கேள்வி எழுப்ப, "நாம் எப்போ தனியாக செய்திருக்கிறோம், அதை அண்னன் அண்ணி பார்த்துக்கொள்வார்கள்" என ஜீவா கூறுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுக்கு வந்தது. ஜீவாவுக்கு தான் மட்டும் தான் மொய் கொடுக்கவில்லை என தெரிந்தால், அதுவே அவர் அந்த குடும்பத்தில் இருந்து பிரியும் அளவுக்கு பெரிய பிரச்சனையாகலாம் என தெரிகிறது. அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கீர்த்தி சுரேஷா இப்படி? தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட்