தினமும் கடவுளிடம் வேண்டினேன்.. இனி நடக்காது! - பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் கண்கலங்கிய வீடியோ
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணன் தம்பிகளில் ஒருவராக நடித்தவர் வெங்கட் ரங்கநாதன். சீரியலிலும் அவரது ரோல் பெயர் வெங்கட் தான்.
அவர் தற்போது சோகமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி தான் அவர் சோகமாக பேசி இருக்கிறார்.

என் கனவு.. இனி நடக்காது
'நாம் எல்லாருடைய வாழ்க்கையிலுமே கனவுகள் இருக்கு. அந்த கனவை நிறைவேற்ற முயற்சிகள் செய்த்த்துக்கொண்டிருப்போம். என் வாழ்க்கையிலும் பல கனவுகள் இருக்கு. அதில் முக்கியமான கனவு விஜய் அண்ணா கூட ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் அது.
நான் இரவு தூங்க போகும் முன்பு கடவுளிடம் வேண்டுவேன். எப்படியாவது ஒரு காட்சியில் கூட நிற்பது போலாவாவது நடித்துவிட வேண்டும் என வேண்டுவேன். நேற்றும் வேண்டினேன், அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன்.