பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் செந்தில் இதுவரை என்னென்ன சீரியல்கள் நடித்துள்ளார்... முழு லிஸ்ட் இதோ
குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து ரசிகர்கள் பார்க்கும் சீரியலாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது கதையில் அடுத்த வாரம் முதல் மகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது ராஜி பரீட்சை எழுத சென்னை வர அவருடன் கோமதி மற்றும் மீனா கிளம்புகிறார்கள். மீனா அம்மாவின் உறவினராக அழகே அழகு சீரியல் குடும்பம் உள்ளார்கள்.

தற்போது அடுத்த வாரம் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-அழகே அழகு குடும்பங்களின் மகா சங்கமம், என்னென்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் வெங்கட். இவர் சின்னத்திரையில் பல வருடங்களுக்கு முன்பே என்ட்ரி கொடுத்து சீரியல்கள் பல நடித்து வருகிறார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் இதற்கு முன் என்னென்ன சீரியல்கள் நடித்துள்ளார் என்ற விவரத்தை காண்போம்.
கனா காணும் காலங்கள், ஆண்பாவம், மாயா, புகுந்த வீடு, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே, பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா, பாரதி கண்ணம்மா, கிழக்கு வாசல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என இத்தனை தொடர்கள் நடித்துள்ளார்.