பசங்க 3 ரெடி.. படமா, வெப் சீரிஸா? பாண்டிராஜ் அறிவிப்பு
குழந்தைகளை மையமாக வைத்து கதை எழுதி அதை 'பசங்க' என்ற ஹிட் படமாக கொடுத்தவர் பாண்டிராஜ். அந்த படத்தில் விமல், வேகா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர்.
தேசிய விருதுகள், மாநில விருதுகள் என பல விருதுகளை அந்த படம் அள்ளியது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து 2015ல் பசங்க 2 படத்தை பாண்டிராஜ் எடுத்தார். அதில் சூர்யா நடித்திருந்தார்.

பசங்க 3
தற்போது பரிமளா அண்ட் கோ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அது ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் தான் பசங்க 3 கதையை எழுதி ரெடியாக வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
விரைவில் அதை படமாகவோ வெப் சீரிஸ் ஆகவோ எடுக்க போவதாக அவர் கூறி இருக்கிறார். அதில் விமல், வேகா உள்ளிட்டோரும் நடிப்பார்கள் என அவர் கூறியிருக்கிறார்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan