சூர்யா-பாண்டிராஜ் இணைந்த படத்தின் ஃபஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?- சன் பிக்சர்ஸ் கொடுத்த அப்டேட்
சூரரைப் போற்று படத்தை முடித்த சூர்யா அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி வந்தார்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வரும் படங்களில் வாடிவாசல் மற்றும் சூர்யாவின் 40வது படங்கள் உள்ளன.
வாடிவாசல் படத்தின் ஃபஸ்ட் லுக் அண்மையில் தான் வெளியாகி இருந்தது, ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி விட்டனர்.
தற்போது சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் 40வது படத்தின் தகவல் ஒன்று வந்துள்ளது.
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஜுலை 22ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அப்டேட் கொடுத்துள்ளனர்.
#Suriya40FirstLook on July 22 @ 6 PM!#Suriya40 #Suriya40FLon22nd@Suriya_offl @pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan pic.twitter.com/ZzMNetQf8y
— Sun Pictures (@sunpictures) July 19, 2021