பாபநாசம் 2 - உலகநாயகன் கமல் ஹாசனின் அதிரடி செயல்
கமல் ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் பாபநாசம். இது மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக்.
சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.
தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2ஆம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் சம்மதித்தால் திரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்வேன் என்று படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்நிலையில் பாபநாசம் 2 படத்தில் ஒரு மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் அதில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம், இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக..