Paper Tiger: திரை விமர்சனம்

By Sivaraj Nov 29, 2026 04:30 AM GMT
Report

ஸ்கார்லெட் ஜோகன்ஸன், ஆடம் ட்ரைவர் நடிப்பில் ஜேம்ஸ் க்ரே இயக்கத்தில் வெளியாகியுள்ள Paper Tiger ஹாலிவுட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Paper Tiger: திரை விமர்சனம் | Paper Tiger Movie Review

கதைக்களம்

1986-யில் நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் இர்வின் பேர்ல் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். அவரது சகோதரர் கேரி NYPD அதிகாரியாக இருந்தவர். தற்போது அவர், தனது சட்ட அமலாக்க அனுபவம் மற்றும் பரந்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் ஆலோசனை வணிகத்தை தொடங்குகிறார்.

துறைமுகங்களில் உள்ள ரஷ்ய குடியேறிகளின் வணிகங்களுக்கு ஆலோசனை வழங்கும்போது, கேரி தனது சகோதரர் இர்வினையும் அதில் ஈடுபடுத்துகிறார். இதற்கிடையில், இர்வினின் மனைவி ஹெஸ்டருக்கு கண் தொடர்பான பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனால் அதனை தனது குடும்பத்திற்கு தெரியாதபடி பார்த்துக் கொள்கிறார்.

Paper Tiger: திரை விமர்சனம் | Paper Tiger Movie Review

இந்த நிலையில் இர்வின் தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு கேரி அறிமுகப்படுத்திய இடத்திற்கு செல்கிறார். அங்கு மூவருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க, இர்வினின் குடும்பத்திற்கே உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

அதிலிருந்து அந்த குடும்பம் எப்படி தப்பித்து வெளியே வந்தது? கேரி தனது சகோதரரின் குடும்பத்தை காப்பாற்றினாரா? ஹெஸ்டரின் பிரச்சனை என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

Paper Tiger: திரை விமர்சனம் | Paper Tiger Movie Review

படம் பற்றிய அலசல்

2019-யில் பிராட் பிட்டை வைத்து Ad Astra என்ற படத்தைக் கொடுத்த ஜேம்ஸ் க்ரே இப்படத்தைக் இயக்கியுள்ளார். கிரைம் டிராமா ஜானர் படத்தை அதிக பேச்சுகள் வைத்தே கொண்டு சென்றுள்ளார். எந்தக் கட்டத்தில் படம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்புடனே பார்க்க வேண்டியுள்ளது.

ரஷ்யர்களிடம் சிக்கியபோது இர்வின் மற்றும் அவரது மகன்கள் பயத்தில் உறையும் காட்சி நம்மை சீட் நுனிக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் விறுவிறுப்போ, பரபரப்போ இல்லை என்பது ஏமாற்றம். முக்கால்வாசி காட்சிகள் உரையாடல் வாயிலாக செல்வது சலிப்பை ஏற்படுத்துகிறது.

Paper Tiger: திரை விமர்சனம் | Paper Tiger Movie Review

கிளைமேக்சில் வரும் துப்பாக்கிச்சூடு சண்டை சிறப்பு. இர்வின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மைல்ஸ் டெல்லர் ஸ்மார்ட்டாக எதையும் செய்யவில்லை. அவருக்கு பதிலாக சகோதரர் ஆடம் டிரைவர்தான் அவரது குடும்பத்தையே காப்பாற்றுகிறார். ஆனால் ஹீரோ போல் காட்சிப்படுத்தப்பட்டது இர்வின் கதாபாத்திரம்தான்.

ஸ்கார்லெட் ஜோகன்ஸன் நடிப்பில் மிரட்டினாலும், அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 114 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருந்தாலும், போதும்பா சீக்கிரம் முடிங்க என்றே கேட்க வைக்கிறது ஜேம்ஸ் க்ரேயின் திரைக்கதை. ஆடம் டிரைவர் மிடுக்காக தனது கதாபாத்திரத்தை செய்துள்ளார்.

Paper Tiger: திரை விமர்சனம் | Paper Tiger Movie Review

இர்வின் பல காட்சிகளில் இயலாமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது மகன்களாக நடித்த இருவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். ஜக்கியுன் பேகா-ஆஸேயின் ஒளிப்பதிவு 1986 கால நியூயார்க்கை கண்முன் நிறுத்துகிறது. கிறிஸ்டோபர் ஸ்பெல்மேனின் இசை ஓகே ரகம்.

க்ளாப்ஸ்

  • நடிகர்களின் பங்களிப்பு
  • மேக்கிங்
  • பின்னணி இசை

பல்ப்ஸ்

  • பொறுமையை சோதிக்கும் திரைக்கதை
  • யார் ஹீரோ என்கிற குழப்பம்

மொத்தத்தில் இந்த பெப்பர் டைகர் பொறுமையை சோதிக்கும் விலங்கு.

Paper Tiger: திரை விமர்சனம் | Paper Tiger Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US