பாரடைஸ் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
Paradise movie 2 days box office: நானி நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான பாரடைஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாரடைஸ்
நானி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் பாரடைஸ். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராகவ், சம்பூர்னேஷ், மோகன் பாபு, சோனாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பாரடைஸ் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளை விட 2-வது நாளில் இப்படத்தின் வசூல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri