பறந்து போ - 3BHK படங்கள் இதுவரை செய்துள்ள வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பறந்து போ
கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர்களை தவிர அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 10.2 கோடி வசூல் செய்துள்ளது.
3BHK
சித்தார்த், சரத்குமார், தேவயானி மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 3BHK. இப்படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 16.4 கோடி வசூல் அள்ளியுள்ளது.
இந்த இரண்டு திரைப்படங்களும் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்த்துவிட்டோம். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.