6 நாட்களில் பறந்து போ படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பறந்து போ
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Seven Seas and Seven Hills Productions, JioHotstar மற்றும் GKS Bros Productions ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ், அஞ்சலி, விஜய் யேசுதாஸ் என பலரும் இணைந்து நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு பின்னணி இசையமைக்க, சந்தோஷ் தயாநிதி பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் பறந்து போ திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
