முதல் நாள் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பறந்து போ
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என ஆகச்சிறந்த படைப்புகளை இதுவரை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் ஐந்தாவது திரைப்படமாக வெளியாகியுள்ளது பறந்து போ. இப்படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். மேலும் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ், மிதுல் ரயான் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், ராமின் பறந்து போ திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
