பராசக்தியில் முக்கிய காட்சிகளை நீக்கிய சென்சார்! அண்ணா பேசிய வசனமும் நீக்கம்

By Parthiban.A Jan 09, 2026 11:05 AM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் பராசக்தி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சென்சார் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது U/A சான்றிதழ் தரப்பட்டு இருப்பதால் ரிலீஸ் உறுதியாகி இருக்கிறது.

இருப்பினும் படத்தில் இருந்து பல முக்கிய காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.

பராசக்தியில் முக்கிய காட்சிகளை நீக்கிய சென்சார்! அண்ணா பேசிய வசனமும் நீக்கம் | Parasakthi Censor Cuts Important Scenes Trimmed

மாற்றங்கள்

நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பற்றிய முழு விவரம் வெளியாகி இருக்கிறது.  

  • 'தீ பரவட்டும்' என்ற வசனம் நீக்கப்பட்டு அதற்கு பதில் 'நீதி பரவட்டும்' இடம்பெறும்.
  • தீயிட்டு கொளுத்தும் காட்சிகள், வன்முறை காட்சிகள், இறந்த உடல்களை காட்டும் நேரம் 50% குறைப்பு.
  • ஹிந்தி அரக்கி என வரும் இடங்களில், அரக்கி என்ற வார்த்தை நீக்கம்.
  • ஹிந்தி அரக்கி உருவ பொம்மை எரிப்பு காட்சி நீக்கம்.
  • ஹிந்தி எழுத்துக்கள் மீது சாணம் அடிக்கும் காட்சி நீக்கம்.
  • "அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்" என அண்ணா பேசும் காட்சி நீக்கம்.

இப்படி பல முக்கிய காட்சிகளை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US