3 நாட்களில் பராசக்தி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பராசக்தி
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியிருந்தார்.

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவருடைய இசையில் உருவாகும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் இதுவரை மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. முதல் இரண்டு நாட்கள் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், மூன்றாவது நாளில் வசூல் குறைந்துள்ளது.

ஆனால், பொங்கல் விடுமுறையில் மீண்டும் இப்படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் வசூல் என்னென்ன சாதனை படைக்கப்போகிறது என்று.