பராசக்தி படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது? இதோ முழு விவரம்
பராசக்தி
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் பராசக்தி.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்க சிவகார்த்திகேயன், ரவி மோகன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அப்போது நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.
வசூல் விவரம்
பராசக்தி படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், நான்கு நாட்களை கடந்திருக்கும் பராசக்தி உலகளவில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது.

கடந்த சில நாட்கள் வசூலில் சற்று சரிவை சந்தித்திருந்த நிலையில், இன்றில் இருந்து வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.