முதல் நாளில் சென்னையில் மட்டுமே சிவகார்த்திகேயனின் பராசக்தி எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
பராசக்தி
சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த பராசக்தி படம் வெளியாகுமா இல்லையா என்று கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தி இறுதியில் படக்குழு சொன்னபடி படம் இன்று (ஜனவரி 10) மாஸாக வெளியாகிவிட்டது.
1960களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் எல்லோரின் நடிப்பை தாண்டி வில்லனாக நடித்திருக்கும் ஜெயம் ரவிக்கும் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவிற்கும் அதிக பாராட்டுக்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
U/A சான்றிதழுடன் வெளியாகியுள்ள இப்படம் பொங்கல் விடுமுறைகளில் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
நல்ல விடுமுறை நாளை குறிவைத்து வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டுமே எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இப்படம் முதல் நாளில் சென்னையில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.