பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான்
சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் கடந்த ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டதற்கு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படமும் ஜனநாயகன் போல சென்சாரில் பிரச்சனைகளை சந்தித்தது.
ஆனால் பல வசனங்களை மியூட் செய்யவும், சில காட்சிகளை நீக்கவும் படத்தின் தரப்பு ஒப்புக்கொண்டதால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு வசூல்
முதல் நாளில் உலக அளவில் 27 கோடி ரூபாய் பராசக்தி வசூலித்து இருக்கிறது. இதில் வெளிநாட்டில் வந்த வசூல் பெரிய பங்கு ஆகும்.
பராசக்தி வெளிநாட்டில் மட்டும் 12.8 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இது சிவகார்த்திகேயனின் அமரன் பட வசூலை விட அதிகம்.

UKவில் மட்டும் Rs.1 கோடி
குறிப்பாக UKவில் முதல் நாளில் மட்டும் £87,842 வசூல் வந்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1.06 கோடி ரூபாய் ஆகும்.