களைகட்டும் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா! புரோமோ இதோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவை + சமையல் என இரண்டுமே ஒரே இடத்தில் என்பதால் இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பரவியது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 7 நடைபெற்று வருகிறது.

இதில் வழக்கத்திற்கு மாறாக ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதுவரை நடைபெற்றுள்ள குக் வித் கோமாளி சீசன் 7ல் நிஷா - ரியாஸ் ஜோடி எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிமளா & கோ
படத்தின் புரொமோஷனுக்காக திரை பிரபலங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவார்கள். அந்த வகையில், இந்த வாரம் பரிமளா & கோ திரைப்பட பிரபலங்கள் ஜெயராம், இயக்குநர் பாண்டிராஜ், மிஸ்கின், அனந்திகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர். அதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி நகைச்சுவையில் களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வாரம் பரிமளா & கோ டீம் வேற இணைந்துள்ளதால் சொல்லவா வேண்டும், கண்டிப்பாக வேற லெவலில் இருக்கப்போகிறது.