பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படம்.. முன்னணி ஹீரோவுடன் கூட்டணி! யார் பாருங்க
ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்து கடந்த வருடம் ரிலீஸ் ஆகி இருந்த படம் பார்க்கிங். கார் பார்க்கிங் இடத்திற்காக இரண்டு வீட்டுகாரர்கள் சண்டை போடுவது போல இருந்த கதை நல்ல வரவேற்பை பெற்று படம் ஹிட் ஆனது.
இந்த படத்தை இயக்கி இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு பாராட்டுகளும் குவிந்தது. அடுத்து தெலுங்கு ஹிந்தி உட்பட பல மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் ஆக இருக்கிறது. ஒரு வெளிநாட்டு மொழியிலும் அந்த படம் ரீமேக் ஆக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது.
விக்ரம் உடன் கூட்டணி
இந்நிலையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து நடிகர் விக்ரமிடம் கதை சொல்லி இருக்கிறாராம். கதை பிடித்துவிட்டதால் விக்ரம் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் படம் இருக்கிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர இருக்கிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
