முதல் நாள் பார்க்கிங் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பார்க்கிங்
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல லோ பட்ஜெட் திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
அயோத்தி, போர் தொழில், டாடா, குட் நைட், சித்தா ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் தற்போது ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படமும் இணைந்துள்ளது.

ஆம், ராம்குமார் பாலகிருஷ்ணன் அறிமுக இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், சிறந்த விமர்சனங்களை பெற்று வரும் பார்க்கிங் திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 45 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan