மீனா குழந்தை மாதிரி.. கணவர் மரணம் பற்றி பிரபல நடிகர் உருக்கம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் கடந்த பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2022 ஜூன் 27ம் தேதி இரவு 7 மணிக்கு மரணம் அடைந்தார்.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அளித்த பேட்டியில் மீனா பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். மீனா குழந்தை மாதிரி, அவருக்கே ஒரு குழந்தையா என எப்போது நேரில் பார்த்தாலும் கேட்பாராம் பார்த்திபன்.

மீனாவுக்கு இந்த சங்கடமான நிலையில் வந்த முதிர்ச்சி பற்றி பேசிய பார்த்திபன் 'நமக்கு அன்புக்குரியவர்கள் ஐசியூவில் இருக்கும் வரை நாம் பிரார்த்தனை செய்வோம். ஆனால் அவர் இறக்கும்போது இதுதான் நிதர்சனம் என ஒரு முதிர்ச்சி வந்துவிடும்' என தெரிவித்து இருக்கிறார் பார்த்திபன்.
வித்யாசாகர் நீண்டநாட்கள் சிகிச்சையில் இருந்ததால், இது இப்படித்தான் முடியும் என மீனாவுக்கு தெரிந்திருக்கலாம் எனவும் பார்த்திபன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan